ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ஜார்க்கண்டில் பக்தர்கள் சென்ற ஸ்கார்பியோ கார் விபத்து 13 பேர் உயிரிழப்பு!

ஜார்க்கண்டில் பக்தர்கள் சென்ற ஸ்கார்பியோ கார் விபத்து 13 பேர் உயிரிழப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள் உட்பட ஒரே கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஞ்சி–பாட்னா தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் ஜங்காரோ கிராமத்தைச் சேர்ந்த 14 பேர், ராஜ்ரப்பா கோவிலுக்கு வழிபாடு செய்ய ஸ்கார்பியோ காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கார் விபத்தில் சிக்கியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விபத்து நடந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்ததுடன், படுகாயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், ஜங்காரோ கிராம மக்களிடையே பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.