ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.

 

அதன்படி, டிசம்பர் 4ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், டிசம்பர் 5ஆம் தேதியும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.