திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” – மரகதம் குமரவேல்!

“ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” – மரகதம் குமரவேல்!

 

 

எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மரகதம் குமரவேல், தனக்கு வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் குற்றம்சாட்டிய அவர், தங்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், எதிர்க்கட்சிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து தேர்தலில் வெற்றி பெற்றதாக மரகதம் குமரவேல் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.