திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கமலாலயத்தில் காவி நிற திருவள்ளுவர் சிலை! தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சை!

கமலாலயத்தில் காவி நிற திருவள்ளுவர் சிலை! தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சை!

 

 

சென்னை போரூரில் நேற்று (அக். 11) பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது, பாஜகவினர் திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. திருவள்ளுவரின் அடையாளம் மற்றும் அவருக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டது தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் எழுந்தன.

 

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திலும் புதிதாகக் காவி நிறத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே போரூரில் நடைபெற்ற நிகழ்வுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், கமலாலயத்தில் சிலை வைக்கப்பட்டிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.