கைக்குழந்தையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக எம்எல்ஏ: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

சென்னை ஐஐடியில் இன்று (அக். 11) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ பல்லவி தனது கைக்குழந்தையுடன் கலந்துகொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பதையும், மகப்பேறு விடுப்பு வழங்குவதையும் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கைக்குழந்தைகளைப் பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது அரசியல் விளம்பரத்திற்காகவும், பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காகவும் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக விமர்சித்துள்ளார். அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)