கணவரைக் கொன்று நீல நிற டிரம்மில் உடல் பாகங்களை மறைத்த வழக்கு: இருவருக்கும் மரண தண்டனை!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கணவரைக் கொலை செய்து அவரது உடல் பாகங்களை நீல நிற டிரம்மில் அடைத்து வைத்த வழக்கில் முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹில் ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நீதிபதி அரவிந்த் குமார் தீர்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
தீர்ப்பின்போது இருவரும் சிறையிலிருந்து காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையின்போது அவர்கள் அமைதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிரம், கத்தி மற்றும் மருந்துகளை விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 22 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.




கருத்துகள் (0)