கடைகளில் தமிழ் பெயர்ப்பலகை விதியை முழுமையாக அமல்படுத்த வேண்டும்! வேல்முருகன் வலியுறுத்தல்!

தமிழ்நாடு நாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்ப்பலகை விதியை அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இறுதி அவகாசத்தைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொதுவெளியில் தமிழுக்கு முதலிடம் அளிக்கும் வகையில் பெயர்ப்பலகைகளை அமைக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர்களின் அடையாளத்தையும் மொழி உரிமையையும் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் நடைமுறையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)