ரூ.10 கோடி சொகுசு பங்களா வாங்கியதாக பெண் அமைச்சர் மீது சர்ச்சை? சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதனுடன், அந்த அமைச்சரின் தந்தை அரசுத் துறையின் பாலம் மற்றும் சாலை ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ஒப்பந்ததாரர்களிடம் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை முன்வைத்து, சம்பந்தப்பட்ட பெண் அமைச்சர் யார் என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பலர் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். எனினும், பங்களா வாங்கியது மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.




கருத்துகள் (0)