காவிரி நீர் பற்றாக்குறை அச்சம்.. சம்பா சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை!

காவிரியில் போதிய தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் காரணமாக, இந்த ஆண்டு டெல்டா உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் 7 லட்சம் ஏக்கருக்கும் குறைவான நிலங்களிலேயே சம்பா பயிரிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிர்களை முழுமையாக வளர்த்து அறுவடை செய்யும் வரை தொடர்ந்து 80 நாட்களுக்கு தண்ணீர் வழங்குவது தற்போதைய சூழலில் சாத்தியமற்றதாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்குவதுடன், அவர்கள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




கருத்துகள் (0)