சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்.. 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயன்!

தமிழகத்தில் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்.. 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயன்!

தமிழகத்தில் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்காக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள், மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்களின் விவரங்கள் அடிப்படையாகக் கொண்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

தகுதியான குடும்பங்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.