சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நகைகளை மீட்டுத் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி புகார்.. ஞானசேகரனின் தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் தேடல்!

நகைகளை மீட்டுத் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி புகார்.. ஞானசேகரனின் தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் தேடல்!

சென்னை கோட்டூர்புரத்தில் நகைகளை மீட்டுத் தருவதாகக் கூறி பெண் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் சகோதரர் சுரேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கோட்டூர்புரத்தைச் சேர்ந்த நகைக்கடை பெண் வியாபாரியான யாஸ்மினிடம், அடகு வைக்கப்பட்டிருந்த 128 கிராம் தங்க நகைகளை மீட்டுத் தருவதாக சுரேஷ் கூறியுள்ளார். அந்த நகைகளை மீட்டு விற்பனை செய்தால் கூடுதலாக ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி, அதற்காக பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

 

பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தலைமறைவானதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடி புகாரில் தொடர்புடைய சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.