திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
சினிமா

‘ராமாயணா’ படத்திற்காக 12 பட வாய்ப்புகளை நிராகரித்த ஏ.ஆர்.ரகுமான்!

‘ராமாயணா’ படத்திற்காக 12 பட வாய்ப்புகளை நிராகரித்த ஏ.ஆர்.ரகுமான்!

ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பணிகளுக்காக, சுமார் 12 திரைப்படங்களில் இசையமைிக்கும் வாய்ப்புகளை நிராகரித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இப்படத்தின் இசைக்காக அவர் தனது நேரம் முழுவதையும் ஒதுக்கி பணியாற்றியுள்ளார்.

 

கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற ரகுமான், ‘ராமாயணா’ படத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக இசைப்பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து படத்தின் இசையை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், படத்தின் முக்கிய இசைக்கோர்வையான ‘ராவண தாண்டவம்’ உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியதாகவும், அதனை இறுதி செய்வதற்கு முன்பு சுமார் 13 முறை வெவ்வேறு வடிவங்களில் மாற்றி அமைத்ததாகவும் தெரிவித்தார். ஒரு படத்திற்காக இவ்வளவு காலமும் உழைத்து, பல வாய்ப்புகளைத் தவிர்த்தது தனக்கு பெருமை அளிப்பதாகவும் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.