திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
சினிமா

கமல்ஹாசனின் சண்டியர் பட தலைப்புக்கு எதிர்ப்பு.. டிச.7-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

கமல்ஹாசனின் சண்டியர் பட தலைப்புக்கு எதிர்ப்பு.. டிச.7-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘சண்டியர்’ திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வலியுறுத்தி, வரும் டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

 

திரைப்படங்களில் நடிகர்களின் செயல்பாடுகளும், அவர்கள் பயன்படுத்தும் கருத்துகளும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக தென் மாவட்டங்களில் நிலவும் சமூகப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்தப் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

ஏற்கெனவே படத்தின் தலைப்பை மாற்றக் கோரி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மனு அளித்துள்ளதாகவும், இதுகுறித்து படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தின்போது, திரைப்படத்தின் தலைப்பை மாற்றக் கோரி தணிக்கை குழுவிடமும் மனு அளிக்க இருப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.