ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை” – திருமாவளவன் விமர்சனம்!

“கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை” – திருமாவளவன் விமர்சனம்!

 

 

திண்டிவனத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு திமுக உரிய முயற்சிகளை மேற்கொள்ளாததே அக்கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்குக் காரணம் என விமர்சித்துள்ளார். தேர்தல் வெற்றியில் ஒரு சதவீத வாக்குகூட முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை திமுக உணரத் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், கொள்கையில் உறுதியாகச் செயல்பட்டதால்தான் விசிக தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த திருமாவளவன், பாமக அல்லது பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இணையாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.