மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அரசு பள்ளி ஆசிரியர் கைது!

மத்தியப் பிரதேசத்தில் 12-ம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அரசு பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர், மாணவியை தனியாக வந்து சந்திக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்து விடுவதாக ஆசிரியர் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பள்ளி ஆசிரியரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளி மாணவியிடம் ஆசிரியர் தவறான அணுகுமுறையில் நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)