திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு ஒரே நாளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை!

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நாளான நேற்று (நவ.24), 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்ததால் நகரம் முழுவதும் போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, நேற்று மட்டும் சுமார் 10,000 பேருந்துகள், 25,000-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 36,000-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய அளவில் பக்தர்கள் வருகை தந்ததால் நகரில் சுமார் 500 மெட்ரிக் டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. அவற்றை அகற்றி நகரை தூய்மைப்படுத்தும் பணியில் 3,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், நகரின் தூய்மையை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)