சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் தாயார் 87 வயதில் காலமானார்!

சிக்கிம் மாநில முதலமைச்சரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) கட்சியின் தலைவருமான பிரேம் சிங் தமாங்கின் தாயார் தன்மயா தமாங் (87), இன்று (நவம்பர் 25) காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிலிகுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தன்மயா தமாங், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு முதல்வர் பிரேம் சிங் தமாங் குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்மயா தமாங்கின் மறைவுக்கு முதல்வரின் குடும்பத்தினர், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவால் சிக்கிம் அரசியல் வட்டாரத்திலும் சோகமான சூழல் நிலவுகிறது.




கருத்துகள் (0)