அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்திற்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை!

குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 வரை சேமிப்பை வழங்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தில் பயன்பெற தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தகுதியான பயனாளிகளை அரசே அடையாளம் கண்டு தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக உஜ்வாலா திட்டத்தின் கீழ் LPG இணைப்பு பெற்றவர்கள், மகளிர் உரிமைத் தொகை பெறும் குடும்பங்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்டோரின் தரவுகள் பரிசீலிக்கப்படுகின்றன. இந்த விவரங்களின் அடிப்படையில் தகுதியான குடும்பத் தலைவிகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதன் மூலம் தகுதி உள்ளவர்கள் தனியாக அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டிய சிரமம் இல்லாமல், அரசின் திட்டப் பயன்கள் நேரடியாக அவர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயனாளிகளை தரவுகள் மூலம் தேர்வு செய்வதால் தகுதியான குடும்பங்களுக்கு திட்டத்தின் பலன்களை எளிதாக வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)