வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மருந்துக் கடையில் ரூ.1.86 லட்சம் திருட்டு; ஊழியர் கைது!

மருந்துக் கடையில் ரூ.1.86 லட்சம் திருட்டு; ஊழியர் கைது!

 

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேசவதாசபுரத்தில், மருந்துக் கடையில் ரூ.1.86 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ‘செவனா மெடிக்கல் ஷாப்’ கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த பெண் ஊழியர் மோனிஷா, மேஜையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1,86,000 பணத்தைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

 

கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மோனிஷா மீது சந்தேகம் எழுந்தது. ஆரம்பத்தில் திருட்டில் ஈடுபடவில்லை என மறுத்த அவர், செல்போன் டவர் இருப்பிடத் தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் முன்வைத்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட பணம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.