டெல்லியில் தடையை மீறி போராட்டம்.. தேசியக் கொடியுடன் திரண்ட கரப்பான் ஜனதா!

டெல்லியில் உள்ள சென்ட்ரல் பார்க் முன்பு, தேசியக் கொடியுடன் கரப்பான் ஜனதா கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கரப்பான் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போராவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் கட்டுப்படுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.




கருத்துகள் (0)