ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

மாதவிடாய் சுழற்சி அடிக்கடி மாறுகிறதா? அலட்சியம் வேண்டாம்… இது முக்கிய எச்சரிக்கை!

மாதவிடாய் சுழற்சி அடிக்கடி மாறுகிறதா? அலட்சியம் வேண்டாம்… இது முக்கிய எச்சரிக்கை!

 

 

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பொதுவாக 21 முதல் 35 நாட்களுக்குள் ஏற்படலாம். ஆனால், மாதவிடாய் தொடர்ந்து ஒழுங்கற்ற முறையில் வருவது, அதிக ரத்தப்போக்கு அல்லது தாங்க முடியாத வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.

 

சினைப்பை நீர்க்கட்டி நோய்க்குறி (PCOS), கருப்பை நார்த்திசுக் கட்டிகள், அடினோமையோசிஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள், அதிக ரத்தப்போக்கு மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும்.

 

எனவே, மாதவிடாய் தொடர்ந்து ஒழுங்கற்றதாக இருந்தாலோ, வழக்கத்தைவிட அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது கடுமையான வலி இருந்தாலோ மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சரியான நேரத்தில் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறலாம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.