சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
உலகம்

8 வயது சிறுமி கொலை வழக்கு.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

8 வயது சிறுமி கொலை வழக்கு.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

அர்ஜென்டினாவின் லோபோஸ் நகரில் 8 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த வழக்கில், செர்ஜியோ ராமோன் ஒலிவேரா என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், அடுத்த 40 ஆண்டுகளுக்கு அவர் பரோல் கோரி விண்ணப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உறவுக்காரச் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்ற ஒலிவேரா, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது சிறுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரைத் தாக்கி கொலை செய்ததுடன், தடயங்களை மறைக்கும் நோக்கில் தீ வைத்து எரித்ததாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தீர்ப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.