செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்! என்ன காரணம்?

நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்! என்ன காரணம்?

 

 

வெங்காயம் விற்பனை தொடர்பான விவகாரத்தில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் மீதான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ரேஷன் கடைகளுக்கு தரமற்ற வெங்காயத்தை அனுப்பிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.