தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுகள் 2025: டிசம்பர் 12-க்குள் விண்ணப்பிக்கலாம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்கள் இந்த விருதுகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் [awards.tn.gov.in](http://awards.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருதுக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப நடைமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு அரசின் [சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில்](http://environment.tn.gov.in) தெரிந்துகொள்ளலாம்.




கருத்துகள் (0)