விளையாட்டாக முகவரியைப் பகிர்ந்ததால் விபரீதம்.. வீட்டையே காலி செய்த பிரபலம்!

இன்ஸ்டாகிராமில் தனது வீட்டு முகவரியை விளையாட்டாகப் பகிர்ந்த பிரபல இணையவாசி வீரமணிக்கு, தற்போது எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது முகவரியைப் பயன்படுத்தி, கேஷ் ஆன் டெலிவரி முறையில் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் தொடர்ந்து ஆர்டர் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அவரது வீட்டிற்கு வரவழைக்கப்படுவதால், இந்தச் சம்பவம் அவருக்குப் பெரும் தொந்தரவாக மாறியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி, வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விளையாட்டாகப் பகிர்ந்த தனிப்பட்ட தகவல் இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறியிருப்பது சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஒருவரின் அனுமதியின்றி அவரது முகவரியைப் பயன்படுத்திப் பொருட்களை ஆர்டர் செய்வது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.




கருத்துகள் (0)