ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
இந்தியா

நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்! சொத்து தகராறு காரணமா?

நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்! சொத்து தகராறு காரணமா?

 

 

உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா அருகே நக்லா ஸ்ரீபதம் கிராமத்தில் மகேஷ் (37), அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கு முந்தைய இரவில் அவர்கள் நூடுல்ஸ் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உணவில் ஏதேனும் நச்சுப்பொருள் கலந்திருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முதற்கட்ட தகவலின்படி, உணவு நஞ்சானது மட்டுமே மரணத்துக்குக் காரணம் என உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், நூடுல்ஸில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து தகராறு காரணமாக மகேஷ் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மரணத்திற்கான உண்மையான காரணம் விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்குப் பிறகே தெரியவரும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.