“ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்!” – விஜய்யை விமர்சித்த செந்தில் பாலாஜி!

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரக் கொள்முதல் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக அரசு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதாக விஜய் குற்றம்சாட்டிய பழைய வீடியோவைச் செய்தியாளர்களிடம் அவர் காண்பித்தார்.
தற்போது தவெக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்கப்படுவதாகக் கூறிய செந்தில் பாலாஜி, மின்சாரக் கொள்முதல் தொடர்பாக விஜய் முன்பு பேசிய கருத்துகளையும் சுட்டிக்காட்டினார். மேலும், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகக் கூறி, மின்சார நிர்வாகம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.




கருத்துகள் (0)