செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதலா?” – தவெக அரசுக்கு சீமான் கேள்வி!

“ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதலா?” – தவெக அரசுக்கு சீமான் கேள்வி!

 

 

தவெக ஆட்சியில் மின்கட்டணம் ஏற்கெனவே பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்குவது மேலும் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் முடிவை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். மின்சாரக் கொள்முதல் செலவைக் குறைத்து, பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணச் சுமை ஏற்படாமல் தடுப்பதுடன், தடையற்ற மின்சாரம் வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.