சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரண வழக்கு.. 4 காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி!

ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரண வழக்கு.. 4 காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி!

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், வழக்கின் உண்மை நிலையை அறிய அவரது குடும்பத்தினர் சிசிடிவி பதிவுகளை பார்வையிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

 

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், பாலகிருஷ்ணன் சென்றிருந்த நான்கு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு அவரது மனைவி, குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வழக்கறிஞர் ஆகிய நான்கு பேர் சிசிடிவி பதிவுகளை பார்வையிடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிடும்போது, அவற்றை செல்போன் அல்லது வேறு எந்த சாதனத்திலும் பதிவு செய்யக்கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், காட்சிகளை பார்த்த பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

வழக்கு விசாரணை பாதிக்கப்படாமல் இருக்கவும், நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றவும் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாலகிருஷ்ணன் மரணம் தொடர்பான விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.