தமிழகத்தில் சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை!

தமிழகத்தில் இன்று (நவம்பர் 21) மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நிலவும் வானிலை சூழல் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரும்பாலும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும், வறண்ட வானிலை நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால், பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)