பெண் காவலருக்கு பாலியல் தொல்லை புகார்.. புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் அதிரடியாக பணிநீக்கம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சுப்பிரமணியன் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பெண் காவலருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, சம்பந்தப்பட்ட அதிகாரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இதன் தொடர்ச்சியாக அவர் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த புகார் காரணமாக சுப்பிரமணியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் சரத் சவுஹான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான பாலியல் புகார்களை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விவகாரத்தில் இந்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ளது.




கருத்துகள் (0)