சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கட்டுமானப் பொருட்கள் திருடியதாக காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

கட்டுமானப் பொருட்கள் திருடியதாக காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை இடித்து, அதிலிருந்த கட்டுமானப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீது போலீசார் திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை கட்டடம் மற்றும் அதன் சுற்றுச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டு இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிடைத்த கட்டுமானப் பொருட்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புகாரின் அடிப்படையில், ரீத்தாபுரம் பேரூராட்சித் தலைவர் எட்வின் ஜோஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

 

பேரூராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை இடித்து பொருட்களை எடுத்துச் சென்றதாக மக்கள் பிரதிநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.