வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பாலவாக்கத்தில் குடும்பத் தகராறு: மகள் கண்முன்னே மனைவியைக் குத்திக் கொன்ற கணவர்!

பாலவாக்கத்தில் குடும்பத் தகராறு: மகள் கண்முன்னே மனைவியைக் குத்திக் கொன்ற கணவர்!

 

சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக விவேக் என்பவர் தனது மனைவி முத்துபிரியாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் அவர்களது மகள் கண்முன்னே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மனைவியைக் கொலை செய்ததைத் தொடர்ந்து, தனது மகளை அண்ணனிடம் ஒப்படைத்த விவேக், நீலாங்கரை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விவேக் அண்மைக் காலமாக மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கொலைக்கான முழுமையான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மகள் கண்முன்னே தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.