தீபாவளியில் பட்டாசைக் குறையுங்கள்; மதுவை அறவே கைவிடுங்கள்! டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்!

தீபாவளித் திருநாளில் பட்டாசு வெடிப்பதைக் குறைத்துக் கொள்ளவும், மதுப் பழக்கத்தை முற்றிலுமாகக் கைவிடவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருவதாகவும், புவி வெப்பமயமாதல் காரணமாக இயற்கைச் சூழலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மழை பெய்ய வேண்டிய காலங்களில் மழை பெய்யாமல் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்தத் தீபாவளியில் பட்டாசு வெடிப்பதைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றும், மதுவை முற்றிலுமாகத் தவிர்த்து உடல் நலத்தைப் பேண வேண்டும் என்றும் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)