வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் திமுக பிரமுகர் கொடூரக் கொலை! தலையில் பலத்த தாக்குதல்; 3 பேர் கைது!

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் திமுக பிரமுகர் கொடூரக் கொலை! தலையில் பலத்த தாக்குதல்; 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டியில் திமுக பிரமுகர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும், சிலருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பல் லட்சுமணனைத் தாக்கியுள்ளது. இதில் அவரது தலையில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதற்கு முன்னதாக லட்சுமணனின் மகனைத் தாக்க அந்தக் கும்பல் முயன்றதாகவும், அந்த முயற்சி கைகூடாத நிலையில் லட்சுமணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து பிச்சைமுத்து, வாசு, ரஞ்சித்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். பணப் பிரச்சினை கொலைக்குக் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.