தீபாவளிக்கு முன்பே மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வருமா? 1.31 கோடி பெண்கள் எதிர்பார்ப்பு!

நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் மத்தியில் முன்கூட்டியே பணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் ரூ.1,000 உரிமைத் தொகையை, தீபாவளி செலவுகளைச் சமாளிக்கும் வகையில் முன்கூட்டியே வழங்க வேண்டும் எனப் பெண்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 1.31 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பயனடைந்து வருகின்றனர். பண்டிகைக் காலத்தில் புத்தாடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் இதர குடும்பச் செலவுகளை மேற்கொள்ள இந்தத் தொகை உதவியாக இருக்கும் என்பதால், வழக்கமான தேதிக்கு முன்பாகவே பணம் வழங்கப்பட வேண்டும் எனப் பயனாளிகள் வலியுறுத்துகின்றனர். இதற்கிடையே, உரிமைத் தொகையை நாளை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் முன்கூட்டியே பணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே அதிகரித்துள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.




கருத்துகள் (0)