எஸ்பிஐ வங்கியில் 20 டேட்டா சயின்டிஸ்ட் பணியிடங்கள்.. டிசம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்!

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), 20 டேட்டா சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 10, 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆட்சேர்ப்பில் Chief Manager (Data Scientist) பணிக்கு 2 இடங்களும், Manager (Data Scientist) பணிக்கு 14 இடங்களும், Deputy Manager (Data Scientist) பணிக்கு 4 இடங்களும் என மொத்தம் 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பொறியியல் அல்லது முதுகலை பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மேலும், கல்வித் தகுதியில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங் (ML), டேட்டா அனலிட்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் பணியனுபவம் பெற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான வயது வரம்பு மற்றும் அனுபவத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தகுதியானவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)