கொல்கத்தா அஞ்சல் துறையில் 19 பணியிடங்கள்.. 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா மெயில் மோட்டார் சர்வீசஸ் அலுவலகத்தில் 19 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை நவம்பர் 30ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager,
Mail Motor Services,
139, Beleghata Road,
Kolkata – 700015.




கருத்துகள் (0)