புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
அரசியல்

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி புகார் அமித் ஷா கவனத்திற்கு சென்ற தவெக எம்எல்ஏ விவகாரம்!

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி புகார் அமித் ஷா கவனத்திற்கு சென்ற தவெக எம்எல்ஏ விவகாரம்!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது தேசிய அளவிலும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில், பெண் ஆட்சியருக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தொடர்பான தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 

ஏற்கனவே இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் கவனத்திற்கு சென்றிருப்பது தவெகவுக்கு மேலும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.