வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
உலகம்

துபாயில் பயங்கர சாலை விபத்து! லாரி உள்ளிட்ட பல வாகனங்கள் மோதல் – பலர் உயிரிழப்பு!

துபாயில் பயங்கர சாலை விபத்து! லாரி உள்ளிட்ட பல வாகனங்கள் மோதல் – பலர் உயிரிழப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷேக் கலீஃபா பின் சயத் தெருவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

ஒரு லாரி மற்றும் பல வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஃபுஜைரா காவல்துறையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

 

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியாகாத நிலையில், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.