திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

புதுக்கோட்டையில் பரவும் மர்மக் காய்ச்சல்; 8 பேருக்கு டெங்கு உறுதி!

புதுக்கோட்டையில் பரவும் மர்மக் காய்ச்சல்; 8 பேருக்கு டெங்கு உறுதி!

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையைக் கண்காணிப்பதுடன், நோய் பரவலுக்கான காரணங்களைக் கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.