ரூ.1 லட்சம் போட்டால் ரூ.2 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!

அஞ்சலகத்தின் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான கிசான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்யப்படும் தொகை, ஆண்டிற்கு 7.5% வட்டி விகிதத்தில் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்ச வரம்பின்றி முதலீடு செய்யக்கூடிய இத்திட்டத்தில், அவசர தேவைகளுக்காக கடன் பெறும் வசதியும் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் கணக்கை முடித்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இருப்பினும், இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு சலுகை கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் (0)