தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனைக் குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு!

தமிழக மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனைக் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்குத் தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்தக் குழுவில் உறுப்பினராகச் சேர விரும்பும் தகுதியான நபர்கள், வரும் 13.11.2026 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவம், தகுதிகள் மற்றும் பிற வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.scd.tn.gov.in/ மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைச் சரிபார்த்து, காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




கருத்துகள் (0)