தமிழகத்தில் NH-44 மற்றும் NH-744A நெடுஞ்சாலைகளை விரிவாக்க திட்டம் ரூ.11.12 கோடியில் டிபிஆர் தயாரிக்க டெண்டர்!

தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த நவம்பர் 17-ஆம் தேதி டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழகத்தின் சாலை மற்றும் தொழில் வழித்தடத் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழகத்தின் தொழில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலைகளான NH-44 மற்றும் NH-744A ஆகியவற்றை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்காக ரூ.11.12 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான அடுத்தகட்ட பணிகள், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கருத்துகள் (0)