வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

15 வயது பள்ளி மாணவனுடன் தலைமறைவான 26 வயது ஆசிரியை கைது உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தில் 26 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர், தான் பணியாற்றும் பள்ளியின் தாளாளர் மகனும் 11ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவனுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் திடீரென காணாமல் போனது பள்ளி வட்டாரத்திலும் அப்பகுதியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து, மாணவனைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விசாரணையின் அடிப்படையில், லக்னோ அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஆசிரியையையும் மாணவனையும் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

 

மீட்கப்பட்ட 15 வயது மாணவனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர் பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து, 26 வயது ஆசிரியையை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவனை அழைத்துச் சென்ற விவகாரம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.