செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கும்பாபிஷேக விழாவில் பெண்களுடன் கும்மியடித்து நடனமாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

கும்பாபிஷேக விழாவில் பெண்களுடன் கும்மியடித்து நடனமாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, அங்கிருந்த பெண்களுடன் இணைந்து கும்மியடித்து நடனமாடிய நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

 

அன்னவாசலில் உள்ள ஸ்ரீ சின்னம்மாள் மற்றும் ஆவுடை முத்து கருப்பர் கோயிலில் இன்று (நவ.24) மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் தாய்மார்களுடன் மகிழ்ச்சியாக இணைந்து பாரம்பரிய கும்மி நடனத்தில் ஈடுபட்டார்.

 

அரசியல் தலைவர்கள் பொதுமக்களுடன் கலந்து கொண்டு விழாக்களில் பங்கேற்பது போன்ற நிகழ்வுகள் கவனம் ஈர்க்கும் நிலையில், விஜயபாஸ்கர் மக்களோடு மக்களாக இணைந்து கும்மியடித்து நடனமாடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.