திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

தாய் பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகம்: டீசல் ஊற்றி தாயைக் கொன்ற மகன் கைது!

தாய் பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகம்: டீசல் ஊற்றி தாயைக் கொன்ற மகன் கைது!

 

 

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கரெ சையம்மா (40) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரது மூத்த மகன் கரெ துர்கேஷ் (21) இந்தக் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த துர்கேஷ், சம்பவம் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

 

கிராமத்தில் நிகழ்ந்த சில மரணங்களுக்கு தனது தாயார் பில்லி சூனியம் வைத்ததே காரணம் என மூடநம்பிக்கையின் அடிப்படையில் துர்கேஷ் சந்தேகித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவர், தாயின் மீது டீசலை ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.