திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டெல்டா மக்களின் குறைகளை கேட்டறிய 7 பேர் கொண்ட குழுவை அமைத்த ஸ்டாலின்!

டெல்டா மக்களின் குறைகளை கேட்டறிய 7 பேர் கொண்ட குழுவை அமைத்த ஸ்டாலின்!

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7 பேர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்துள்ளார்.

 

இந்தக் குழுவில் திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துரை சந்திரசேகரன், அருண் நேரு, முரசொலி மற்றும் செந்தில் செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்டா பகுதிகளில் நிலவும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிவது இக்குழுவின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்காக குழுவினர் வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். தொடர்ந்து ஒரு வார காலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சிரமங்களை கேட்டறிய உள்ளனர். இந்தப் பயணத்தின் முடிவில், சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை திமுக தலைமைக்கு சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.