ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 42 வயது நபர் கைது!

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தென்காசியைச் சேர்ந்த 20 வயது மாணவி சென்னையில் விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார். கடந்த 20ஆம் தேதி பெருங்களத்தூரில் இருந்து பேருந்தில் பயணம் செய்தபோது, ஆவடியைச் சேர்ந்த கருணாமூர்த்தி (42) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பேருந்தில் நடந்த சம்பவத்தையடுத்து மாணவி உடனடியாக சக பயணிகளின் உதவியை நாடி, கருணாமூர்த்தியை பிடித்துள்ளார். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்து, நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கருணாமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.




கருத்துகள் (0)