திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து விபத்து 2 பேர் உயிரிழப்பு 13 ஐயப்ப பக்தர்கள் காயம்!

திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து விபத்து 2 பேர் உயிரிழப்பு 13 ஐயப்ப பக்தர்கள் காயம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சபரிமலைக்கு ஐயப்பன் தரிசனம் செய்யச் சென்ற பக்தர்கள் பயணித்த வேன் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி அருகே ஐயப்ப பக்தர்களின் வேன் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து வேன் மற்றும் லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்தது.

 

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 13 பக்தர்கள் மீட்கப்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.